உள்ளூர் செய்திகள்

வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் செவிலியர்களுக்கு பயிற்சி வழங்கிய போது எடுத்த படம்.

வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல் குறித்து செவிலியர்களுக்கு பயிற்சி

Published On 2023-06-09 09:24 GMT   |   Update On 2023-06-09 09:24 GMT
  • தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல் முகாம் பற்றிய பயிற்சி நடைபெற்றது.
  • தினசரி அறிக்கை அனுப்புவது பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது.

அந்தியூர்:

அந்தியூர் வட்டாரம் அத்தாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் தலைமையில் தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல் முகாம் பற்றிய பயிற்சி நடைபெற்றது.

சமுதாய நல செவிலியர், பகுதி சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியா ளர்கள் ஆகியோருக்கு வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் பயிற்சி வழங்கினார்.

அனைத்து 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் வீடு வீடாக சென்று வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் ஓ.ஆர்.எஸ். பாக்கெட் வழங்குதல் குறித்தும், ஓ.ஆர்.எஸ். கரைசல் ஓர் உயிர் காக்கும் அமுதம் என்பது பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது.

தினசரி அறிக்கை அனுப்புவது பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் அந்தியூர் சுற்று வட்டார பகுதியில் பணிபுரியும் செவிலியர்கள், மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News