விதைச்சான்று அலுவலர்களுக்கு பயிற்சி
- நிலக்கடலை விதைப்பண்ணையில் விதைச்சான்று அலுவலர்களுக்கு களப்பயிற்சி வழங்கப்பட்டது.
- தொழில் நுட்பங்கள் பற்றி சாகுபடியாளருக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
ஈரோடு:
பெருந்துறை அருகே நிலக்கடலை விதைப்பண்ணையில் விதைச்சான்று அலுவலர்களுக்கான களப்பயிற்சி வழங்கப்பட்டது.
நடப்பு ஆண்டில் கீழ்பவானி ஆயக்கட்டு பாசன பகுதியில் எண்ணெய் வித்து பயிர்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு ள்ளது. இதனால் விவசாயி கள் நிலக்கடலை மற்றும் எள் பயிரிட்டுள்ளனர்.
நிலக்கடலை பயிரில் ஜி.ஜே.ஜி.9, பி.எஸ்.ஆர்.2, தரணி ஆகிய ரகங்களின் ஆதார நிலை–1 விதை ப்பண்ணை காஞ்சிகோவில் பகுதியில் அமைக்கப்பட்டு ள்ளது.
இப்பண்ணைகளை விதை சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மோகனசுந்தரம் ஆய்வு செய்தார்.
பின்னர் நிலக்கடலை ரகங்களின் மகசூல் திறன், குணாதி சயங்கள், வயலாய்வு மேற்கொள்ளும் நடை முறைகள், கலவன்களை கண்டறியும் முறைகள், அவற்றை அகற்றும் முறை குறித்து விதைச்சான்று அலுவலர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் நிலக்கடலை பயிர் உற்பத்தி மற்றும் பயிர் பாதுகாப்பு தொழில் நுட்பங்கள் பற்றி சாகுபடியாளருக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இதில் ஈரோடு மாவட்ட விதைச்சான்று அலுவலர்கள் பங்கேற்றனர்.