உள்ளூர் செய்திகள்

வைகாசி விசாக திருவிழா 2-ந் தேதி நடக்கிறது

Published On 2023-05-29 06:53 GMT   |   Update On 2023-05-29 06:53 GMT
  • ஊஞ்சலூர் அருகே காவிரியில் தீர்த்தம் எடுத்து சென்னிமலை வந்தடைந்து,
  • சந்தன காப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடக்கிறது.

சென்னிமலை,

'கந்த சஷ்டி கவச' அரங்கேற்ற தலமாகவும், ஆதி பழனி என போற்ற ப்படும் சென்னி மலை முருகன் கோவிலில் முருக பெருமானின் அவதார தின மான வைகாசி விசாகத்தை முன்னிட்டு, 67 வது வருட வைகாசி விசாக பெரு விழா, வருகிற 2-ந் தேதி கோலாகலமாக கொண்டா டப்படுகிறது.

அதைத் தொடர்ந்து 1-ந் தேதி மாலை 5 மணிக்கு ஊஞ்சலூர் அருகே காவிரியில் தீர்த்தம் எடுத்து சென்னிமலை வந்தடைந்து, 2-ந் தேதி காலை 7.30 மணிக்கு சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவி லில் இருந்து மேளதாளம் முழங்க காவிரி திருமஞ்சன தீர்த்தம் ஊர்வலமாக புறப்பட்டு மலை கோவிலை சென்று அடைத்தல். மலை மீது முருகன் கோவிலில் 2-ந் தேதி 11 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் தொடங்கி கலச ஸ்தாபனம், 108 சங்குஸ்தாபனம், ஜெபம், ஓமம் நடக்கிறது.

தொடர்ந்து மதியம் 2 மணிக்கு முருகப்பெரு–மானுக்கு பஞ்சாமிருதம், தேன், பழங்கள், பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து மாலை 5 மணிக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடக்கிறது.

அதை தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடக்கிறது. 2-ந் தேதி காலை 9 மணிமுதல் இரவு 9 மணி வரை மலை அடிவாரத்தில் உள்ள அருணகிரிநாதர் மடத்தில் அன்னதானம் வழங்கப்ப டுகிறது. இதற்கான ஏற்பாடு களை கோவில் செயல் அலுவலர் சரவணன் தலை மையில் அருணகிரிநாதர் மடம் மற்றும் கிருத்திகை விசாக குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News