ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக பரவலாக பெய்த மழை
- ஈரோட்டில் சில இடங்களில் லேசான மழை பெய்தது.
- திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிறுவியது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெ யிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. காலை முதல் மாலை வரை வெயில் தாக்கம் உச்சத்தில் இருந்து வந்தது. அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைத்த தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஈரோட்டில் சில இடங்களில் லேசான மழை பெய்தது. எனினும் நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிக மாக இருந்தது. மாலை திடீரென வானங்களில் கருமேகங்கள் சூழ்ந்து முதலில் லேசான மழை பெய்ய தொடங்கியது.
அதன் பிறகு நேரம் செல்ல சொல்ல இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேர ம் பலத்த மழை பெய்தது.
இதனால் ஈரோடு மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் சாலைகளின் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகளு க்காக குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வந்த சூழ்நிலையில் மழை பெய்த தால் குழிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிறுவியது.
மாவட்டத்தில் அதிக பட்சமாக மொடக் குறிச்சியில் 46 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
இதுபோல் எலந்தகுட்டை மேடு, கவுந்தப்பாடி, கொடுமுடி, குண்டேரி பள்ளம், தாளவாடி பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் 2-வது நாளாக பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள னர்.
ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:
மொடக்குறிச்சி-46, எலந்தகுட்டைமேடு-44, கவுந்தப்பாடி-41.20, ஈரோடு-20, கொடுமுடி-14.20, குண்டேரிபள்ளம்-10, தாளவாடி-8, பவானி-6.40, சென்னிமலை-2.