ஈரோடு மாவட்டத்தில் அணை பகுதிகளில் பரவலாக பெய்த மழை
- மாவட்டத்தில் அணைப்பகுதிகளில் பலத்த மழை பெய்து உள்ளது.
- கவுந்தப்பாடி பகுதியில் இரவில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.
ஈரோடு:
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகி றது. குறிப்பாக இரவு நேரத்தில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக கோபி, நம்பியூர், புளியம்பட்டி பகுதியில் உள்ள தரைப்பால ங்கள் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் வாழ்க்கை ஸ்தம்பித்தது. இந்நிலையில் நேற்று இரவும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது.
கவுந்தப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி யில் இரவில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இதேப்போல் பவானி, அம்மாபேட்டை, கோபி, பெரு ந்துறை, தாளவாடி, கொடுமுடி, சத்தியமங்கலம், நம்பியூர் போன்ற பகுதிகளி லும் சாரல் மழை பெய்தது.
கடந்த 4 நாட்களாக மாவட்டத்தில் அணைப்பகுதிகளான வரட்டுப்பள்ளம், குண்டேரி ப்பள்ளம், பவானிசாகர், கொடிவேரி போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்து உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கவுந்தப்பாடி-28.20, வரட்டுப்பள்ளம்-17, பவானி-15.80, அம்மா பேட்டை-14.20, தாளவாடி-11, கோபி-10.20, பெருந்துறை-10, பவானி சாகர்-8.20, கொடுமுடி-8, ஈரோடு-6.20, கொடிவேரி-6, சத்தியமங்கலம்-3, நம்பியூர்-2.