பண்ணாரி சோதனை சாவடி பகுதியில் முகாமிட்ட காட்டு பன்றிகள்
- வனப்பகுதிகளில் இருந்து வெளியேறிய காட்டு பன்றிகள் பண்ணாரி சோதனை சாவடி பகுதியில் கூட்டமாக சுற்றி திரிகிறது.
- கூர்மையான கொம்புடன் சுற்றும் காட்டு பன்றிகளால் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அவை அடிக்கடி ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறிய ஏராளமான காட்டு பன்றிகள் தற்போது பண்ணாரி சோதனை சாவடி பகுதியில் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிகிறது.
இந்த காட்டுபன்றிகள் சாலைகளில் அங்கும், இங்குமாக சுற்றி திரிவதால்திம்பம் மலைப்பகுதிக்கு செல்லும்வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
ேமலும் கூர்மையான கொம்புடன் சுற்றும் காட்டு பன்றிகளால் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே இந்தபகுதியில்சுற்றி திரியும் காட்டு பன்றிகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என்று பண்ணாரி சோதனை சாவடி போலீசார் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இந்த காட்டு பன்றிகளால் பண்ணாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் இடையூறு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
எனவே ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் முன்பே இந்த காட்டு பன்றிகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.