ஆதார் சிறப்பு முகாம் நடத்த பொதுமக்கள் கோரிக்கை
- புதிதாக குழந்தைகளுக்கு ஆதார் எடுத்தவர்கள் பள்ளியில் சேர்ப்பதற்கு ஜாதி சான்று, இருப்பிட சான்று முதலியவற்றிற்கு ஆதார் கட்டாயம் தேவைபடுவதால் அவர்கள் பதிவு செய்ய முடியாமல் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.
- குழந்தைகளுக்கு ஆதார் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்று பொதுமக்களும், தன்னார்வ ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்தியூர்:
அந்தியூர் தவிட்டுப்பா–ளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 7-ந் தேதி ஆதார் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதில் பர்கூர், தாமரை பகுதியிலும், அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் புதியதாக ஆதார் எடுக்க குழந்தைகள் மற்றும் ஆண்கள், பெண்கள் முகவரி மாற்றாம், பெயர் மாற்றம், புகைப்பட மாற்றம் செய்பவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் இந்த சிறப்பு முகாமில் வந்து ஆதார் எடுத்து சென்றனர்.
இதில் ஆதார் எடுத்தவர்கள் 70 சதவீதபேர்களுக்கு மீண்டும் எடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அவர்கள் எடுத்த ஆதார் புகைப்பட எண்ணை பதிவு செய்து பார்க்கும்போது அதில் காரண விளக்கம் எதுவும் தென்படவில்லை என்ற பதிவு மட்டும் வருகிறது.
எனவே முகாமில் புதிதாக குழந்தைகளுக்கு ஆதார் எடுத்தவர்கள் பள்ளியில் சேர்ப்பதற்கு ஜாதி சான்று, இருப்பிட சான்று முதலியவற்றிற்கு ஆதார் கட்டாயம் தேவைபடுவதால் அவர்கள் பதிவு செய்ய முடியாமல் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.
இதனை உடனடியாக சரி செய்து மீண்டும் குழந்தைகளுக்கு ஆதார் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்று பொதுமக்களும், தன்னார்வ ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.