- அதிகாலையில் எழுந்து வழக்கம்போல் முருகன் தனது மொபட்டில் வெளியே சென்றவர் மீண்டும் காலை வீடு திரும்பினார்.
- அப்போது வீட்டின் முன்புறம் இருந்த தேனீக்கள் அவரை சூழ உடனடியாக அங்கிருந்து வீட்டுக்குள் சென்று கதவை சாத்தி கொண்டார்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை காமராஜர் வீதியில் ஆற்றோரத்தில் குடியிருப்பவர் முருகன் (60). முடி திருத்தும் கூலித்தொழிலாளி. இவர் தனியாக குடியிருந்து வருகிறார்.
இவரது வீட்டின் எதிரே ஒரு வேப்ப மரம் உள்ளது. இன்று அதிகாலையில் எழுந்து வழக்கம்போல் முருகன் தனது மொபட்டில் வெளியே சென்றவர் மீண்டும் காலை 8 மணிக்கு வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்புறம் இருந்த தேனீக்கள் அவரை சூழ உடனடியாக அங்கிருந்து வீட்டுக்குள் சென்று கதவை சாத்தி கொண்டார். பின்னர் அவ்வப்போது வெளியே எட்டி பார்த்துள்ளார்.
வெளியே வந்தால் தேனீக்கள் அவரை நோக்கி வருவதால் அவர் மீண்டும் வீட்டுக்குள்ளேயே சென்று விட்டார்.
அதனால் அவர் வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார். இது குறித்து செல்போன் மூலம் அவருக்கு தெரிந்தவர் களுக்கு தகவல் தெரிவித்து உள்ளார். இருப்பினும் அப்பகுதிக்கு செல்ல மற்றவர்களும் அச்சப்படுகின்றனர்.
மேலும் ஆற்றங்கரையில் ஆடு, மாடு மேய்ப்பவர்களும் அவ்வழியே மரத்தை ஒட்டியவாறு தான் செல்ல வேண்டும். ஆனால் இதுவரை அப்பகுதியில் யாரும் செல்லவில்லை.
இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.