உள்ளூர் செய்திகள்

மனு அளிக்க வந்த முன்னாள் ராணுவ வீரர்கள்.

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வரிவிலக்கு கோரி முன்னாள் துணை ராணுவ வீரர்கள் மனு

Published On 2023-08-21 07:44 GMT   |   Update On 2023-08-21 07:44 GMT
  • 20 வருடங்களுக்கு மேலாக உயிரை பணயம் வைத்து நாட்டுக்காக எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தற்போது ஓய்வு பெற்றுள்ளோம்.
  • திண்டுக்கல் மாவட்டத்திலும் முன்னாள் மத்திய துணை ராணுவ படை வீரர்களுக்கு வீட்டு வரி, குடிநீர் வரி ஆகியவற்றிற்கு விலக்கு அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய துணை ராணுவ படை வீரர்கள் 10க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனு அளிக்க வந்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, திண்டுக்கல் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட முன்னாள் மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் வசித்து வருகிறோம். 20 வருடங்களுக்கு மேலாக உயிரை பணயம் வைத்து நாட்டுக்காக எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தற்போது ஓய்வு பெற்றுள்ளோம்.

கோயம்புத்தூர், கடலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வீட்டு வரி, குடிநீர் வரி ஆகியவற்றிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்திலும் முன்னாள் மத்திய துணை ராணுவ படை வீரர்களுக்கு விலக்கு அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News