உள்ளூர் செய்திகள்

மாணவிகளின் பெற்றோர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

பேட்டையில் பரபரப்பு- பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் போலீஸ் நிலையம் முற்றுகை

Published On 2023-08-28 09:11 GMT   |   Update On 2023-08-28 09:11 GMT
  • மாணவிகளின் பெற்றோர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று மதியம் பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒன்று திரண்டனர்.
  • மாணவிகள் பஸ்சில் ஏறுவது, இறங்குவதில் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

நெல்லை:

நெல்லை பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

போலீஸ் நிலையத்தில் புகார்

ஏழை-எளிய மாணவிகள் பயின்று வரும் இப்பள்ளி தொடங்கும் நேரத்திலும், முடியும் வேளையிலும் பஸ் நிறுத்தத்தில் வாலிபர் சிலர் தொல்லை கொடுப்பதாகவும், பஸ்களில் மாணவிகளை முறையாக ஏற்றி செல்வதில் உரிய பாதுகாப்பின்றி கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடவும், போக்குவரத்தை சீர் செய்திடவும் பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் கல்வி மேலாண்மை குழு மூலமாக பேட்டை போலீஸ் நிலையத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் போலீசாரின் போதிய நடவடிக்கை இன்றி மாணவிகள் இன்னலுக்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாணவிகளின் பெற்றோர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று மதியம் பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒன்று திரண்டனர்.

மாணவிகளிடம் கேலி, கிண்டல் செய்வது, தவறாக அணுகுவது உள்ளிட்ட அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாணவிகள் பஸ்சில் ஏறுவது மற்றும் இறங்குவதில் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.அந்த வேளைகளில் போலீசார் மாணவிகளின் நலம் கருதி போக்குவரத்தை சீர் செய்திடவும் , மாணவி களுக்கு தொல்லை தரும் நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்தனர்.

அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய டவுன் உதவி கமிஷனர் சுப்பையா பஸ் நிறுத்தத்தில் உரிய போலீசார் பாது காப்பு பணிகளை மேற்கொள்ள வும், போக்கு வரத்தினை சீர் செய்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி தெரி வித்ததையடுத்து அவர் கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News