இளைஞர்களுக்கு உடற்பயிற்சி, விளையாட்டு அவசியம்- அன்புமணி ராமதாஸ்
- பாஸ்ட் புட் மேற்கத்திய கலாச்சாரம் திணிக்கப்பட்டுள்ளதால் பல நோய்கள் இளைஞர்களை தாக்குகிறது.
- ரத்த சோகை, ரத்த அழுத்தம், இருதய நோய் பிரச்சனைகள் சிறுவயதிலேயே வருகிறது.
திருநாகேஸ்வரம்:
கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சிக்குட்பட்ட மருத்துவக்குடி கிராமத்தில் அன்புமணி ராமதாஸ் எம்.பி ஒதுக்கீடு செய்த தொகுதி நிதி ரூ.25 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட இறகுப்பந்து உள் விளையாட்டரங்கம் திறப்பு விழா நடைபெற்றது.
பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்து சிறிது நேரம் விளையாடவும் செய்தார்.
பின்னர் விழாவில் பேசியதாவது:-
இன்றைய இளைஞர்களுக்கு விளையாட்டு அவசியமானது.
ரத்த சோகை, ரத்த அழுத்தம், இருதய நோய் பிரச்சனைகள் சிறுவயதிலேயே வருகிறது.
30 ஆண்டுகளுக்கு முன்னர் மாரடைப்பு என்றால் 55 முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு தான் வந்ததாக கேள்விப்பட்டி ருக்கிறோம்.
ஆனால் இன்று பாஸ்ட் புட் மேற்கத்திய கலாச்சாரம் திணிக்கப்பட்டுள்ள தால் பல நோய்கள் இளைஞர்களை தாக்குகிறது.
எந்த ஒரு உடற்பயிற்சியும் விளை யாட்டும் இல்லாமல் நாள் முழுவதும் கம்ப்யூட்டர், கைபேசியை பார்த்துக் கொண்டிருப்பதை மாற்றி அமைக்க அரசும் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சுப்பிரமணியன், பேரூராட்சி செயல் அலுவலர் ராம்பிரசாத், திருபுவனம் பேரூராட்சி செயல் அலுவலர் சிவலிங்கம், துணைத்தலைவர் கமலாசேகர், பேரூராட்சி கவுன்சிலர்கள் ம.க.பாலு, சமிம்நிஷா ஷாஜகான், முத்துபீவி ஷாஜகான், பரமேஸ்வரிசரவணன், பா.ம.க மாவட்ட செயலாளர் ஜோதிராஜ், மாநில உழவர் பேரியக்க செயலாளர் ஆலயமணி, பா.ம.க முன்னாள் மாவட்ட செயலாளர் குமார், கிராம நாட்டான்மைகள் இளங்கோவன், பாலகி ருஷ்ணன், அசோக்குமார், ரமேஷ், பாலகுரு, ராமன், பொறுப்பாளர்கள் சாமிநாதன், வினோத், இளஞ்செழியன், ஒப்பந்த க்காரர் ஞானபிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.