குப்பை தொட்டியில் கிடந்த காலாவதியான அரசு சத்து டானிக் பாட்டில்கள்
- ஊட்டசத்து குறைபாடு மற்றும் இரத்த சோகை உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படுவது.
- காலவதி ஆகும் வரை நோயாளி களுக்கு வழங்காமல் வைத்திருந்தார்களா?
தஞ்சாவூர்:
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ஆர்.எம்.எஸ். காலனி அருகே குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் தமிழ்நாடு அரசு அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய ங்களில் நோயாளிகளுக்கு வழங்குவதற்காக விநியோகித்த 200-க்கும் மேற்பட்ட அயர்ன் அன்ட் போலிக் ஆசிட் சிரப் ஐ.பி என்ற டானிக் பாட்டில்கள் ஆயிரம் பாட்டில்கள் கொட்டப்பட்டுள்ளன.
இந்த டானிக் ஊட்டசத்து குறைபாடு மற்றும் இரத்த சோகை உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படுவது.
இந்த நிலையில் அயர்ன் அன்ட போலிக் ஆசிட் சிரப் ஐ.பி டானிக் 8-ம் மாதம் காலாவதி உள்ளது.
இதனை குப்பை கிடங்கில் கொட்டியது யார்? காலவதி ஆகும் வரை நோயாளி களுக்கு வழங்காமல் வைத்திருந்தார்களா என்ற கேள்வி சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மிகவும் முக்கியமான இந்த மருந்து பொருளை காலாவதியாகும் முன்னரே வேறு அரசு மருத்துவமனைக்கு கொடுத்திருந்தால் பயன் உள்ளதாக இருந்திருக்கும் என்றும் அவர்கள் கூறினர்.