உள்ளூர் செய்திகள்

மாணவிகள் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்த போது எடுத்த படம்.


ஆலங்குளத்தில் இயற்கை முறை விவசாயம் குறித்து விளக்கம்

Published On 2023-01-05 08:46 GMT   |   Update On 2023-01-05 08:46 GMT
  • ஆலங்குளம் வட்டாரத்தில் கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லுரி இளங்கலை இறுதியாண்டு மாணவிகள் கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவங்களை பெற்று வருகின்றனர்.
  • இயற்கை முறையில் விவசாயம் செய்வதன் நன்மைகளையும் , இயற்கை விவசாய சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பது பற்றியும் மாணவிகள் விவசாயிகளுக்கு விளக்கினர்.

ஆலங்குளம்:

ஆலங்குளம் வேளாண் உதவி இயக்குநர் சிவகுருநாதன், துணை வேளாண் அலுவலர் முருகன், வேளாண் அலுவலர் சண்முகப்பிரியா ஆகியோர் மாணவிகளை வழி நடத்தி வருகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக மாணவிகள் பேபிசாலினி, ஹேனா குமாரி, இந்துஜா, கவிதா, கீர்த்தனா, லக்ஷயா ஆகியோர் ஆலங்குளம் அருகே மாறாந்தை கிராமத்தில் இயற்கை முறை வேளாண்மை குறித்து விவசாயிகளிடையே விளக்கி கூறினர். இயற்கை முறையில் விவசாயம் செய்வதன் நன்மைகளையும் இயற்கை விவசாய சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பது பற்றியும் விவசாயிகளுக்கு விளக்கினர்.

மேலும் இயற்கை விவசாய சான்றிதழ் பெறுவதால் கிடைக்கும் சலுகைகளையும், நன்மைகளையும் பற்றி விவசாயிகளிடையே எடுத்துரைத்தனர். செயற்கை உரங்களுக்கு மாற்றான இயற்கை உரங்களை பற்றிய துண்டு பிரசுரங்களை விவசாயிகளுக்கு வழங்கினர்.

Tags:    

Similar News