கோவையில் மீன் கடை ஊழியரிடம் பணம் பறிப்பு
- மோகனசுந்தரம் வேலைக்கு செல்வதற்காக சத்தி ரோடு கணபதி அருகே நடந்து சென்றார்.
- ரூ.600-யை எடுத்து கொண்டு தப்பினார்.
கோவை,
கோவை சரவணம்பட்டி விசுவாசபுரத்தை சேர்ந்தவர் மோகனசுந்தரம்(65). மீன் கடை ஊழியர். சம்பவத்தன்று இவர் வேலைக்கு செல்வதற்காக சத்தி ரோடு கணபதி அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் மது குடிக்க பணம் கேட்டார். ஆனால் அவர் கொடுக்க மறுத்தார். ஆத்திரமடைந்த வாலிபர் கத்தியை மோகனசுந்தரத்தின் கழுத்தில் வைத்து மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.600-யை எடுத்து கொண்டு தப்பினார்.
இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். விசாரணையில் கத்தி முனையில் பணம் பறித்தது கணபதி சின்னசாமி நகரை சேர்ந்த அரவிந்தசாமி(28) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கணபதி மாநகரை சேர்ந்தவர் காவலாளி சாமிநாதன்(52). சம்பவத்தன்று இவர் கணபதி மணியக்காரம் பாளையத்தில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 500 பணம் பறித்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் பணம் பறித்த ரத்தினபுரி கண்ணப்ப நகரை சேர்ந்த ஆதித்யன்(28) என்பவரை கைது செய்து ஜெயிலில் யில் அடைத்தனர்.