உள்ளூர் செய்திகள்

கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட குடும்பத்தினர்

Published On 2023-11-27 09:45 GMT   |   Update On 2023-11-27 09:45 GMT
  • தேசியக்கொடியை முண்டாசாக அணிந்து வந்திருந்ததால் பரபரப்பு
  • உறவினர்கள் சொத்துக்களை அபகரித்ததாக மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை. 

ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையத்தை சேர்ந்தவர் தவுலத். இவர் இன்று காலை தனது மனைவி, மாமியார், மகள், மற்றும் குழந்தையுடன் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

பின்னர் தவுலத் மற்றும் அவரது குடும்பத்தினர் கலெக்டர் அலுவலக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். கோஷங்களும் எழுப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ரேஸ்கோர்ஸ் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவ ர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று வண்டியில் ஏற்றி ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது போராட்ட த்தில் ஈடுபட்ட பெண் கூறியதாவது:-

எங்களுக்கு மேட்டு ப்பாளையம் பகுதியில் 8½ ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால் அந்த இடத்தை எனது உறவினர்கள், எனக்கு தெரியாமலேயே தி.மு.க பிரமுகர் ஒருவருக்கு விற்று விட்டனர்.

அதில் எனக்கான பங்கையும் அவர்கள் தரவில்லை. இதுதொ டர்பாக நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இன்று குடும்பத்துடன் சாலைமறியலில் ஈடுபட்டோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Tags:    

Similar News