உள்ளூர் செய்திகள் (District)

விவசாயி அடித்து கொலை; இருவர் கைது

Published On 2023-05-10 09:41 GMT   |   Update On 2023-05-10 10:11 GMT
  • முழு தொகையை வழங்காமல் ஏன் மண் எடுக்கிறீர்கள் என வாக்குவாதம்.
  • இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பெருந்தோட்டம் கோடாலி தெருவை சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன் இவரது வீட்டின் பின்புறம் தனக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியில் செங்கல் சூளைக்கு மண் எடுப்பதற்காக பெருந்தோட்டம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாஸ்கரன் என்பவருக்கு 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.

கடந்த சில நாட்களாக மண் எடுக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று இரவு மண் எடுக்கும் பொழுது மண்ணிற்கான முழு தொகையை வழங்காமல் ஏன் மண் எடுக்கிறீர்கள் என்று ராஜேந்திரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாத முற்றியதால் ஆத்திரமடைந்த பணியாளர்கள் ராஜேந்தி ரனை மண்வெட்டியால் தலையில் தாக்கியுள்ளனராம். இதில் சுயநினைவிழந்து கீழே விழுந்த ராஜேந்திரன் அசைவற்று கிடந்துள்ளார்.

இதனை அடுத்து பாஸ்கரனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் அவரது ஊழியர்கள் பின்னர் டிராக்டரை ஏற்றி விபத்து நடந்தது போல் உருவகத்தை ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

விவசாயி ராஜேந்திரன் வெகு நேரமாக வீட்டிற்கு வராததால் அவரது உறவினர்கள் வயலின் பின் பகுதிக்கு சென்ற போது தான் உடல் நசுங்கி கொடூரமாக ராஜேந்திரன் இறந்து கிடப்பது தெரிய வந்தது.

தகவல் இந்த திருவெண்காடு போலீசார் ராஜேந்திரனின் உடலை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர் பாஸ்கரன் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் அவரது பணியாளர்களை கைது செய்ய வேண்டும் என ராஜேந்திரன் உறவினர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் பெருந்தோட்டம் கிராமத்தில் பதற்றம் நிலவுவதால் திரளான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

ராஜேந்திரனை அடித்து கொலை செய்துவிட்டு டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டது போல் சித்தரிப்பு செய்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாஸ்கரன் மற்றும் அவரது டிராக்டர் ஓட்டுநர் பாலா ஆகிய இருவரை திருவெண்காடு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

Tags:    

Similar News