உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட குருவையா, சின்னமாரியப்பன்.


புளியங்குடியில் விவசாயி கொலை-கைதான அண்ணன், தம்பி வாக்குமூலம்

Published On 2022-12-30 09:00 GMT   |   Update On 2022-12-30 09:00 GMT
  • குருவையா , சின்னமாரியப்பன் ஆகியோர் மைதுகனியை வெட்டிக்கொலை செய்தனர்.
  • மைதுகனி தனது தோட்டத்தில் காவலுக்காக நாய்களை வளர்த்து வந்தார்.

புளியங்குடி:

தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி அம்பேத்கர் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் மைதுகனி ( வயது 46). இவருக்கு திருமணமாகி ராமலெட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

விவசாயி கொலை

மைதுகனி அப்பகுதியில் உள்ள நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் மைது கனி தோட்டத்தில் காவலுக்கு தங்கியிருந்தார்.

அப்போது பக்கத்து தோட்டத்தை சேர்ந்த குருவையா ( 45), அவரது தம்பி சின்னமாரியப்பன் (40) ஆகியோர் மைதுகனியை வெட்டிக்கொலை செய்தனர்.

சகோதரர்கள் கைது

இது தொடர்பாக புளியங்குடி இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளான குருவையா, சின்ன மாரியப்பன் ஆகிய இருவரையும் கைது செய்தார். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கூறியதாவது:-

மைதுகனி தனது தோட்டத்தில் காவலுக்காக நாய்களை வளர்த்து வந்தார். அந்த நாய்கள் எங்கள் தோட்டத்திற்குள் அடிக்கடி புகுந்து நாங்கள் வளர்த்து வரும் கோழி, மாடுகளை கடித்து வந்தது. இதுகுறித்து நாங்கள் அவரிடம் தட்டி கேட்டோம்.

இதேபோன்று அவரிடம் தட்டிகேட்டபோது அவர் எங்களை தாங்கினார். இது தொடர்பாக போலீசில் புகார் செய்தோம். எனினும் அவர் தொடர்ந்து எங்களுக்கு இடையூறு செய்து வந்தார். இதனால் எங்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. சம்பவத்தன்று காவல் பணியில் ஈடுபட்டிருந்த மைதுகனியை நாங்கள் வெட்டிக்கொன்றோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News