மேட்டுப்பாளையம் அருகே உழவர் தின விழா மற்றும் விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
- மரக்கன்றுகள் நடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கூட்டம் நடந்தது.
- கெம்மாரம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா பொன்னுச்சாமி முன்னிலை வகித்தார்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் கெம்மாரம்பாளையம் ஊராட்சி கண்டியூர் கிராமத்தில் தமிழக அரசின் வேளாண்மை துறை சார்பில் வேளாண்மை விரிவாக்க துணை இயக்கம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, விரிவாக்க சீரமைப்பு திட்டம் இணைந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உழவர் தின விழா மற்றும் விவசாயிகளுடான ஆலோசனை கூட்டம் நடந்தது.
நிகழ்ச்சியில் ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ கலந்து கொண்டார். காரமடை வேளாண்மை உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி வரவேற்றார். கெம்மாரம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா பொன்னுச்சாமி முன்னிலை வகித்தார்.
கோவை வேளாண்மை இணை இயக்குனர் முத்துலட்சுமி, வேளாண்மை துணை இயக்குனர் வெங்கடாசலம், மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் வேளாண் காடுகள் வணிக மன்றத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துபெருமாள், காரமடை வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் சுரேஷ்குமார் ஆகியோர் பேசினர்.
நிகழ்ச்சியில் காரமடை தோட்டக்கலை உதவி இயக்குனர் சுசீந்திரா, என்ஜீனியரிங் துறை உதவி பொறியாளர் ஹசீனா, கால்நடை உதவி மருத்துவர் வருண், உதவி வேளாண்மை அலுவலர் ராமகிருஷ்ணன், பட்டு வளர்ச்சித்துறை இளநிலை ஆய்வாளர் சிவசங்கர், உதவி வேளாண்மை அலுவலர் சிவராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சரிதா நன்றி கூறினார்.