வடமதுரையில் உணவு பூங்காவை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர விவசாயிகள் கோரிக்கை!
- திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர், வடமதுரையை சுற்றி ஏராளமான மலைகிராமங்கள் உள்ளன.
- அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள உணவு பூங்கா விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர், வடமதுரையை சுற்றி ஏராளமான மலைகிராமங்கள் உள்ளன. இங்கு பயிரிடப்படும் காய்கறிகள் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் சில நேரங்களில் விலை கிடைக்காமல் விவசாயி களுக்கு நஷ்டம் ஏற்படுத்து கிறது.
மேலும் விலை அதிகரித்த போதும் போதுமான லாபம் அவர்களுக்கு கிடைக்க வில்லை. எனவே அரசு சார்பில் உணவு பூங்கா அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு 10 மெகா உணவு பூங்கா அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதில் ஒன்று அய்யலூர் அருகே தங்கம்மாபட்டியில் அமைக்க முடிவு செய்யப்ப ட்டது.
அதன்படி ரூ.82 கோடி மதிப்பில் மாம்பழ கூழ், நிலக்கடலை, புளி, தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட வேளாண் பொருட்களை உணவு பொருட்களாக மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் உணவுப்பூங்கா அமைக்கும் பணி கடந்த 2020-ம் ஆண்டு தொடங்க ப்பட்டது. இதற்காக 10 ஏக்கரில் நிலம் கைய கப்படுத்தப்பட்டு குளிர்சா தன கட்டமைப்பு, வணிகம் செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு ள்ளது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், சுற்றுவட்டார பகுதிகளில் வெங்காயம், தக்காளி, மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் பயிரிட்டு வருகிறோம். மழை காலங்களில் உற்பத்தி குறைவாக இருக்கும்போது நல்ல விலை கிடைக்கும். ஆனால் சில நேரங்களில் அதிக வரத்து இருந்தால் விலை கிடைக்காமல் உணவுப்பொருட்கள் அழி யும் நிலை ஏற்பட்டு வரு கிறது.
எனவே குளிர்சாதன கிட்டங்கி அமைத்தால் இப்பகுதி விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். அய்யலூர் பகுதியில் தக்காளி அதிகளவில் பயிரிடப்படுகிறது. விலை வீழ்ச்சி காரணமாக கடந்த சில நாட்களாக சாலை யோரம் தக்காளிகளை கொட்டி செல்லும் அவலநிலை ஏற்பட்டு வருகிறது. எனவே உணவு பூங்கா விரைந்து செயல்பாட்டிற்கு வந்தால் தக்காளி பதப்படுத்தப்படும்.
மேலும் ஜூஸ் கம்பெனிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. இதன்மூலம் விவசாயிகளுக்கு நிரந்தர விலை கிடைக்கும். இந்த உணவு பூங்காவை விரைவில் திறக்க வேண்டும். இதன்மூலம் அய்யலூர், எரியோடு, வடமதுரை, குஜிலியம்பாறை, பாளையம் பகுதி விவசாயிகள் வாழ்க்கைத்தரம் உயரும் என்றனர்.