உடன்குடி வட்டார பகுதியில் குளம்-குட்டைகளை நிரப்ப சொந்த செலவில் பணிகளை செய்யும் விவசாயிகள்
- உடன்குடி வட்டார பகுதியில் 10-க்கும் மேற்பட்ட குளங்கள், குட்டைகள், மற்றும் ஆறு உள்ளது.
- தண்ணீர் வரும் கால்வாயில் உள்ள அடைப்புகளை விவசாயிகள் தண்ணீருக்குள் இறங்கி அப்புறப்படுத்தி வருகின்றனர்.
உடன்குடி:
உடன்குடி வட்டார பகுதியில் 10-க்கும் மேற்பட்ட குளங்கள், குட்டைகள், மற்றும் ஆறு உள்ளது. இவைகளுக்கு இந்த ஆண்டு எப்படியாவது தண்ணீர் கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் விவசாயிகள் மிகுந்த ஆர்வமாய் உள்ளனர். தண்ணீர் வரும் கால்வாயில் உள்ள அடைப்புகளை விவசாயிகள் தண்ணீருக்குள்இறங்கி அப்புறப்படுத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு பருவ மழை சரியாக பெய்யவில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள குளம், குட்டைகளுக்கு தண்ணீர் வரவில்லை. இந்த ஆண்டு பருவமழை வரும். குளம்- குட்டைகள் முழுமையாக நிரம்பி விடும் என்ற நம்பிக்கையில் பல்வேறு விவசாய அமைப்புகள் தண்ணீர் வரும் கால்வாய் மற்றும் குளம்- குட்டைகளை சொந்த செலவில் சீரமைத்து வருகின்றனர்.
இது பற்றி விவசாயி ஒருவர் கூறுகையில், அரசு சீரமைப்பதாக சொல்லி குளம், குட்டைகளில் உள்ள மணலை அள்ளி எடுத்துசென்று விடுவார்கள். நாங்கள் குளம், குட்டைகளில் உள்ள மணலை எடுத்து கரையோரமாக வைத்து கரைகளை பலப்படுத்துகிறோம். எல்லாமே அரசுசெய்யும் என்று காத்திருந்தால் காலதாமதம் ஆகிவிடும். அதனால் நாங்கள் இப் பணியை செய்து வருகிறோம் என்று கூறினார்.