உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் திரண்டு மனு

Published On 2023-10-09 09:51 GMT   |   Update On 2023-10-09 09:51 GMT
  • பேரூராட்சி குப்பைகளை விவசாய நிலத்தில் கொட்டக்கூடாது
  • அரசாங்கம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

கோவை,

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று காலை தொடங்கியது. அப்போது எண்ணற்றோர் கோரிக்கை மனுக்களை நேரடியாக கலெக்டரிடம் வழங்கினர். இதன்ஒருபகுதியாக ஆனைமலை தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வா கிகள் இன்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-

கோவை மாவட்டம் ஆனைமலை தாலுகா, கோட்டூர் மலையாண்டி பட்டணம் பகுதிக்கு உட்ப ட்ட பேரூராட்சியில் எண்ணற்றோர் விவசாயம் செய்து வருகின்றனர். அங்கு உள்ள வழித்தடங்களில் பேரூராட்சி நிர்வாகம் கடந்த சில நாட்களாக குப்பைகளை கொட்டி வருகிறது. இதனால் அங்கு விவசாயம் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

ஆனைமலை விவசாயிகள் சொந்த செலவில் பாதை அமைத்தும், குளம்-குட்டைகள் மூலம் மழை நீரை சேகரித்து விவசாயம்-குடிநீருக்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலை யில் பேரூராட்சி நிர்வாகம் நீர்நிலைகளுக்கு அருகிலும், விவசாய பாதை களுக்கு செல்ல முடியாத வகையி லும் குப்பைகள் கொட்டுவது, தமிழகஅரசு மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவு களை மீறுவதாக உள்ளது.

மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆனைமலை தாலுகாவிற்கு நேரடியாக வந்திருந்து ஆய்வு செய்து இவ்விடத்தில் குப்பைகளை கொட்ட கூடாது, ஏற்கனவே உள்ள பேரூராட்சி குப்பை கிடங்கை பயன்படுத்த வேண்டும் எனற அறிவுறுத்தி சென்றார்.

இருந்தபோதிலும் விவசாய நிலங்கள் உள்ள பகுதிகளில் பேரூராட்சி நிர்வாகம் தொடர்ந்து குப்பைகளை கொட்டி வருகிறது. எனவே அரசாங்கம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News