கந்தம்பாளையத்தில் விவசாயிகளுக்கு உழவன் செயலி பயன்பாடு பயிற்சி
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம், நல்லூர் கந்தம்பாளையத்தில் உழவன் செயலி பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது.
- உழவன் செயலி பதிவிறக்கம் செய்தல், அதன் பயன்கள் குறித்து விவசாயிகளிடையே எடுத்துக்கூறினார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம், நல்லூர் கந்தம்பாளையத்தில் உழவன் செயலி பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது.
நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கட்டிட வளாகத்தில் அட்மா திட்டத்தின் கீழ் உழவன் செயலி பயன்பா டுகள் குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது. பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்த சாமி முன்னிலை வகித்தார். வேளாண்மை அலுவலர் பாபு உழவன் செயலி பதிவிறக்கம் செய்தல், அதன் பயன்கள் குறித்து விவசாயிகளிடையே எடுத்துக்கூறினார். துணை வேளாண்மை அலுவலர் குழந்தைவேல் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் நாகராஜன், வேளாண்மை துறையில் தற்போதுள்ள மானியத்திட்டங்கள் மற்றும் பயிர் காப்பீட்டு திட்டங்கள் குறித்து எடுத்து கூறினர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் ரவீனா ஆகியோர் செய்திருந்தனர்.