தென்காசி மாவட்ட குளங்களில் இருந்து வண்டல் மண் எடுக்க விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்
- நஞ்சை நிலங்களை மேம்படுத்த ஏக்கர் நிலத்திற்கு 75 கனமீட்டர் அளவு மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- மண்பாண்ட தொழிலுக்காக 60 கனமீட்டர் அளவு கட்டணமில்லாமல் மண் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள குளங்களிலிருந்து விவசாயம் மற்றும் மண்பாண்டம் தொழில் பயன்பாட்டிற்கு கட்டணம் இல்லாமல் வண்டல் மண்,களிமண் வெட்டி எடுப்பதற்காக தென்காசி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள தகுதி வாய்ந்த 310 குளங்கள் கண்டறியப்பட்டு தென்காசி மாவட்ட விவசாய பயன்பாட்டிற்காக நஞ்சை நிலங்களை மேம்படுத்தும் வகைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 1 ஏக்கர் நிலத்திற்கு 75 கனமீட்டர் அளவும் மற்றும் புஞ்சை நிலங்களை மேம்படுத்துவதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 1 ஏக்கர் நிலத்திற்கு 90 கனமீட்டர் அளவும். மேலும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்காக 60 கனமீட்டர் அளவும் மற்றும் சொந்த பயன்பாட்டிற்கு 30 கனமீட்டர் அளவும் கட்டணமில்லாமல் வெட்டி எடுத்து பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
எனவே, இச்சலு கையினை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது நிலத்தின் தரத்தினை மேம்படுத்தும் வகைக்கு தங்களது விவசாயம் நிலம் தொடர்பான பட்டா, சிட்டா அடங்கல், கிரைய பத்திரம் மற்றும் புலப்படநகல் ஆகியவற்றுடனும், மேலும் மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் சான்று களுடனும், சம்பந்தப்பட்ட தாசில்தார்களிடம் உரிய படிவத்தில் விண்ணப்பிக்க லாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.