வடமதுரை, அய்யலூர் பகுதிகளில் சின்ன வெங்காய சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்
- சின்ன வெங்காயம் விலை உயர்ந்து வருவதால் இப்பகுதி விவசாயிகள் அதிக அளவில் சின்ன வெங்காயம் பயிரிட்டனர்.
- அரசு எங்களிடம் இருந்து நேரடியாக காய்கறிகளை கொள்முதல் செய்ய கோரிக்கை விடுத்தனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர், எரியோடு, குஜிலியம்பாறை, பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை ஓரளவு கைகொடுத்ததால் நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.
இதனால் விவசாயிகள் மும்முரமாக பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் காய்கறிகள், மலர் சாகுபடி அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயம் விலை உயர்ந்து வருகிறது. எனவே இப்பகுதி விவசாயிகள் அதிக அளவில் சின்ன வெங்காயம் பயிரிட்டனர்.
தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. உழவு கூலி, ஆட்கள் கூலி என அதிக அளவில் பணம் செலவு செய்துள்ள நிலையில் விைல கிடைக்குமா என எதிர்பார்த்துள்ளனர். இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இங்கு தக்காளி சாகுபடிக்கு அடுத்தபடியாக சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்படு கின்றன.
மழை கைகொடுத்த நிலையில் தற்போது பயிர்கள் செழித்து வளர்ந்து ள்ளன. பல்வேறு இன்னல்களுக்கு இடையே விவசாயம் செய்து வரு கின்றோம்.
இதற்கு விலை கிடை க்குமா என தெரிய வில்லை. பெரும்பாலும் இடைத்தர கர்கள் குறைந்த விலையில் வாங்கி காய்கறிகளை அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்கின்றனர். எனவே அரசு எங்களிடம் இருந்து நேரடியாக காய்கறிகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர்.