உள்ளூர் செய்திகள்

 போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்

Published On 2023-05-10 10:00 GMT   |   Update On 2023-05-10 10:00 GMT
  • சுமார் 250 ஏக்கர் நிலம் வருவாய் துறையால் சூரிய நாராயணபுரம் கிராமத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
  • 8 மாதங்களாக அனைத்து அதிகாரிகளிலும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் களத்தூரை சேர்ந்த விவசாயிகள் நில உரிமை மீட்பு கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தினர்.

மேலும் இது தொடர்பாக பட்டுக்கோட்டை சித்துக்காடு கிராம கமிட்டி தலைவர் மற்றும் களத்தூர் கிராம பொதுமக்கள் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிப்பதாவது:-

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் களத்தூர் ஊராட்சி உட்பட்ட 237 களத்தூர் மேற்கு கிராமத்தில் உள்ள சுமார் 250 ஏக்கர் நிலம் வருவாய்த் துறையால் சூரிய நாராயணபுரம் கிராமத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இது நிலத்தை மீண்டும் எங்கள் கிராமத்தோடு இணைக்க கோரி இது சம்பந்தமாக கடந்த மே 2ம் தேதி அஞ்சல் வழியாக கிராம மக்கள் சார்பாக மனு அளித்துள்ளோம். மேலும் இது சம்பந்தமாக 8 மாத காலங்களாக அனைத்து அதிகாரிகளிலும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இந் நிலையில் மாவட்ட கலெக்டர் அந்த இடங்களை மறு ஆய்வு செய்தும் ஆவணங்களை சரிபார்த்தும் தடையை நீக்கி ஆவண செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இதை அடுத்து இன்று காலை நில உரிமை மீட்பு கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான களத்தூர் ஊராட்சி கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News