உள்ளூர் செய்திகள்

முள்ளங்கிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

வடமதுரை பகுதியில் காய்கறிகள் விலை சரிவால் விவசாயிகள் வேதனை

Published On 2023-01-05 04:46 GMT   |   Update On 2023-01-05 04:46 GMT
  • வடமதுரை, அய்யலூரை சுற்றி ஏராளமான மலைகிராமங்கள் உள்ளன. இங்கு கத்தரி, வெண்டை, தக்காளி, அவரை உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகிறது.
  • இப்பகுதி விவசாயிகளிடமிருந்து காய்கறிகளை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூரை சுற்றி ஏராளமான மலைகிராமங்கள் உள்ளன. இங்கு கத்தரி, வெண்டை, தக்காளி, அவரை உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகிறது. அவ்வப்போது மழை பெய்து வந்தபோதும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதால் காய்கறிகள் பயிரிடுவதில் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இந்தநிலையில் இப்பகுதியில் விவசாயிகள் முள்ளங்கி சாகுபடி செய்தனர். தற்போது ஒரு கிலோ ரூ.4-க்கு மட்டுமே மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். பயிரிடும் செலவு, பராமரிப்பு, சுத்தப்படுத்துதல் என பல்வேறு பணிகளுக்கு பணத்தை செலவழித்த அவர்களுக்கு போதுமான லாபம் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

எனவே இப்பகுதி விவசாயிகளிடமிருந்து காய்கறிகளை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நஷ்டம் அடைந்துள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News