சம்பா பயிர் காப்பீடு செய்ய கால நீட்டிப்பு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
- நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
- சம்பா மற்றும் தாளடி நடவு செய்த பிறகு சான்றிதழ் வழங்கப்படும்.
பூதலூர்:
பூதலூர், திருக்காட்டுப்பள்ளி பகுதியில் சம்பா மற்றும் தாளடி நெல் நடவு பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாகவும், நடவு பணிகளுக்கு மழை காரணமாக ஆட்கள் கிடைக்காததாலும் நடவு பணிகளில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையில் நடப்பாண்டு சம்பா சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்ய நாளை மறுநாள் (15.11.22) அன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பூதலூர் வேளாண்மை வட்டாரத்தில் நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் பல கிராமங்களில் வாயல்களை நடவு பணிக்கு ஆயத்தப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதி நாளை மறுநாள் என்று அறிவிக்கப்பட்டிருப்பது விவசாயிகள் மத்தியில் ஒரு பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பா மற்றும் தாளடி நடவு செய்த பிறகு சான்றிதழ் வழங்க ப்படும் என்று தெரிவித்து விட்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியை நீட்டித்து தர ஆவன செய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.