உள்ளூர் செய்திகள்

தஞ்சை மாவட்டம் சாலியமங்கலத்தில் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், மனு அளித்த விவசாயிகள்.

மயிலாடுதுறைக்கு காரில் சென்ற முதல்-அமைச்சரிடம் மனு அளித்த விவசாயிகள்

Published On 2023-08-24 11:13 GMT   |   Update On 2023-08-24 11:13 GMT
  • கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்
  • ஆலை நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்.

தஞ்சாவூர்: 

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருமண்டகுடி திருஆருரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்தும் , கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்க வலியுறுத்தியும் கடந்த 268 நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மயிலாடு துறை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவ ட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ப தற்காக இன்று தஞ்சை வழியாக மயிலாடுதுறை செல்லும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சாலியமங்கலத்தில் வைத்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மாநில செயலாளர் காசிநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்ட தலைவர் செந்தில் மற்றும் ஏராளமான விவசாயிகள் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில், திருஆரு ரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை சுமார் 100 கோடியும், அதேபோல் விவசாயிகளின் பெயரில் மோசடியாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சுமார் ரூ.300 கோடி கடன் பெற்றுள்ளது.

அந்த கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். ஆலை நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News