உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் தேயிலைக்கு உரிய விலை வேண்டி உண்ணாவிரத போராட்டம்- விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம்

Published On 2023-06-06 09:01 GMT   |   Update On 2023-06-06 09:01 GMT
  • நீலகிரி மாவட்ட விவசாயிகள் கந்துவட்டி வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
  • அரசியல் கட்சிகள் தேயிலைக்கு உரிய விலை வாங்கி தருவதாக கூறி விவசாயிகளை ஏமாற்றுகின்றனர்.

அரவேணு,

கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் நாக்குபெட்டா விவசாயிகள் நல சங்கம் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பொது செயலாளர் சிவகுமார் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகி ரமேஷ் வரவேற்றார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு :-

தற்போது கடந்த சில மாதங்களாக தேயிலை விலை குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் தங்களது குழந்தைகளை பள்ளி, கல்லூரிகளில் சேர்க்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர் இந்நிலையில் மாவட்ட நிர்வாகம், தேயிலை வாரியம் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் பெயரளவில் மட்டும் செயல்பட்டு வருகின்றனர்.

இதனால் நீலகிரி மாவட்ட விவசாயிகள் கந்துவட்டி வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான பச்சை தேயிலைக்கு நிரந்தர விலை வேண்டி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

ஆனால் அரசியல் கட்சிகள் தேயிலைக்கு உரிய விலை வாங்கி தருவதாக கூறி விவசாயிகளை ஏமாற்றுகின்றனர். இந்நிலையில்

அடுத்த மாதம் முதல் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று பச்சை தேயிலைக்கு உரிய விலை கிடைக்க கிராமங்கள் தோறும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கோத்தகிரி பகுதியில் பச்சை தேயிலைக்கு உரிய விலை கிடைக்கும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சேகர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News