பெண்ணை தாக்கிய வழக்கில் தந்தை- மகனுக்கு சிறை
- பெண்ணை கம்பு மற்றும் அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
- பாபநாசம் நீதிமன்றத்தில் வழக்கு சம்பந்தமாக விசாரணை.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடை பார்வ திபுரம் அந்தோணியார் கோவில் தெருவில் வசித்து வருபவர் செல்வமேரி (வயது 40). கடந்த.2012 ம் வருடத்தில் செல்வமேரி வீட்டு முன்பு தீ வைத்து எரிக்கப்பட்ட பழைய துணிகளை யாரோ போட்டு சென்று விட்டதாக செல்வமேரி திட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது வீட்டின் அருகில் குடியிருந்து வந்த அந்தோணி தாஸ் (வயது 48) அவரது மகன் அர்விஸ் ஆகிய இருவரும் சேர்ந்து செல்வ மேரியை கம்பால் மற்றும் அருவாளால் வெட்டி தாக்கி உள்ளனர்.
இதனை தடுக்க வந்த ஸ்டாலின் மற்றும் சார்லஸ் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து செல்வமேரி கொடுத்த புகாரின் பேரில் அப்போதைய பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அந்தோணி தாஸ், அர்விஸ் ஆகிய இருவரையும் பாபநாசம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்ப ட்டனர்.
இந்நிலையில் பாபநாசம் நீதிமன்றத்தில் வழக்கு சம்பந்தமாக விசாரணை நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரணை செய்த பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் அப்துல் கனி, அந்தோணி தாஸ், அவரது மகன் அர்விஸ் ஆகிய இருவருக்கும் 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அர்விஸ்க்கு ரூ.1,500, அந்தோணி தாஸ் க்கு ரூ.1000 அபராத தொகை விதிக்கப்பட்டது.