திசையன்விளை பெண் கொலை: கைதான உறவினர் வாக்குமூலம்
- திசையன்விளை அருகே மகாதேவன்குளம் பள்ளிவாசல் தெருவில் உள்ள உறவினர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
- நான் அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கொண்டு ஜான் ஷாபிவி வீட்டுக்கு சென்று அவரிடம் நகைகளை இரவல் கேட்டேன்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை செல்வ மருதூரை சேர்ந்தவர் ஜான் ஷாபிவி (வயது 48). விவாகரத்து ஆனவர்.
பிணமாக கிடந்தார்
இவர் திசையன்விளை அருகே மகாதேவன்குளம் பள்ளிவாசல் தெருவில் உள்ள உறவினர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று ஜான் ஷாபிவி வீட்டில் இருந்து வெளியே வரவில்லை அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது அவர் பிணமாக கிடந்தார்.
அவர் அணிந்திருந்த நகைகள் காணவில்லை. காதில் ரத்தகாயம் இருந்தது இதுகுறித்து திசையன்விளை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ் பெக்டர்ஸ்டீபன் ஜோஸ் (பொறுப்பு) மற்றும் போலீசார் விரைந்து சென்று ஜான் ஷாபிவியின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக ஜான் ஷாபி வி வீட்டிற்கு அடிக்கடி சென்று வரும் அவரது உறவினரான அப்துல்காதர் (வயது 45) என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவருடைய பேண்ட் பாக்கெட்டுக்குள் ஜான் ஷாபிவி அணிந்தி ருந்த நகையின் ஒரு பகுதி இருந்துள்ளது போலீசார் தொடர்ந்து விசாரணை செய்ததில் அவர் ஜான் ஷாபிவியை கொலை செய்ததை ஒப்புகொண்டார். போலீசார் அவரை கைது செய்தனர் போலீசாரி டம் அவர் கொடுத்த வாக்கு மூலத்தில் கூறியதாவது:-
கழுத்தை நெரித்து கொலை
பக்கத்து ஊரான பெட்டைகுளத்தில் நடந்த கந்தூரி விழாவில் கலந்து கொள்ள பள்ளிவாசல் தெருவில் உள்ள பெரும்பா லானவர்கள் சென்று விட்டனர். நான் அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கொண்டு ஜான் ஷாபிவி வீட்டுக்கு சென்று அவரிடம் நகைகளை இரவல் கேட்டேன்.
அவர் தரமறுத்தார் அதனால் ஆத்திரம் அடைந்த நான் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அவர் அணிந்து இருந்த நகைகளையும், அவர் பயன்படுத்திய செல்போன் மெமரி கார்டையும் எடுத்து கொண்டு சென்றேன் மெமரி கார்டை தீயிட்டு கொழுத்திவிட்டு நகைகளை திசையன்விளை - நான்கு நேரி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகில் உள்ள ஒரு மரத்தடியில் மண்ணில் புதைத்து வைத்தேன். அதில் சிறிதளவு நகை என் பேண்ட் பாக்கெட்டில் இருந்துள்ளது. அதை வைத்து என்னை கண்டு பிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.