உள்ளூர் செய்திகள்

நாசரேத் அருகே பரிசுத்த உபகார மாதா ஆலய திருவிழா - 26-ந்தேதி சப்பர பவனி

Published On 2023-09-20 09:16 GMT   |   Update On 2023-09-20 09:16 GMT
  • திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை 5.30 மணிக்கு ஜெபமாலை, நவநாள் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை ஆசீரும் நடக்கிறது.
  • சோமநாதபேரி பங்குத்தந்தை மைக்கிள் ஜெகதீஸ் மறையுரை ஆற்றுகிறார்.

நாசரேத்:

நாசரேத் அருகே உள்ள தைலாபுரம் பரிசுத்த உபகார மாதா ஆலய திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது.

ஜெபமாலை

திருவிழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் மாலை 7 மணிக்கு ஜெப மாலை, திருக்கொடியேற்றம், மிக்கேல் அதிதூதர் சப்பர பவனி, மறையுரை, நற்கரு ணை ஆசீர் நடைபெற்றது. வடவை மறைவட்ட முதன்மைக்குரு மார்ட்டின் தலைமை வகித்து கொடி யேற்றினார்.

தைலாபுரம் பங்குத்தந்தை ததேயுஸ் ராஜன் வரவேற்றார். மங்களகிரி தூயவளன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ராபின் ஸ்டான்லி மறையுரை ஆற்றினார். இதில் மன்னார்புரம் பங்குத்தந்தை எட்வர்ட், கள்ளிக்குளம் பனிமய அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் எஸ்.கே. மணி மற்றும் இறைமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.

சப்பரபவனி

திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை 5.30 மணிக்கு ஜெபமாலை, நவநாள் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீரும் நடக்கிறது. வருகிற 26-ந்தேதி (செவ்வா ய்க்கிழமை) 9-ம் திருவிழா மாலை 6 மணிக்கு ஜெப மாலை, மறையுரை, திருவிழா சிறப்பு மாலை ஆராதனை தூத்துக்குடி மறைமாவட்ட குருகுல முதல்வர் பன்னீர் செல்வம் தலை மையில் நடக்கிறது. இந்த ஆராத னையில் கள்ளிக்குளம் பனிமய அன்னை மெட்ரிக் பள்ளி முதல்வர் மணி மறையுரை ஆற்றுகிறார். இதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு அன்னையின் மற்றும் புனிதர்களின் திரு உருவ சப்பர பவனி நடக்கிறது.

27-ந்தேதி (புதன்கிழமை) 10-ம்திருவிழா காலை 6.30 மணிக்கு ஜெபமாலையும், காலை 7 மணிக்கு பெருவிழா திருப்பலியும் சாத்தான்குளம் மறைவட்ட முதன்மைக்குரு ரவிபாலன் தலைமையில் நடக்கிறது. சோமநாதபேரி பங்குத்தந்தை மைக்கிள் ஜெகதீஸ் மறையுரை ஆற்றுகிறார். காலை 10 மணிக்கு திருமுழுக்கு வழங்கு தல் நிகழ்ச்சியும், காலை 11 மணிக்கு அன்னையின் மற்றும் புனிதர்களின் திருஉருவ சப்பர பவனியும் நடக்கிறது. அன்று மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை பவனி தெ ன்மண்டல பணிக்குழுக்கள் ஒருங்கி ணைப்பாளர் நெல்சன் பால்ராஜ் தலைமை யில் நடக்கிறது. சவேரி யார்புரம் பங்குத்தந்தை ரெமிஜியூஸ் மறையுரை ஆற்றுகிறார். இரவு 10 மணிக்கு இன்னிசை விருந்து நிகழ்ச்சி நடக்கிறது.

ஏற்பாடுகளை தைலாபுரம் பரிசுத்த உபகார மாதா ஆலய பங்குத்தந்தை ததேயுஸ் ராஜன் தலைமையில் நிர்வாக கமிட்டி தலைவர் கிறிஸ்டோ பர், செயலாளர் ரவீந்திரன், பொருளாளர் பீற்றர், விழா கமிட்டி தலை வர் மனோ கரன், கமிட்டி உறுப்பினர்கள் டோலர், மரிய செல்வராஜ், தியா க்கோன், அந்தோணி வினோத், இருதய பார்த்தி பன், நோபட், ஜேசுராஜா, மரிய சுதாகர் மற்றும் விழாக்குழுவினர், இறை மக்கள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News