ஆத்தூரில் விவசாயிகளுக்கு வயல்வெளி பயிற்சி வேளாண்மை இணை இயக்குனர் பங்கேற்பு
- தேசிய உணவு பாதுகாப்பு எண்ணெய்வித்து இயக்கம் திட்டத்தின் கீழ் தங்க பயிரான சோயா பீன்ஸ் செயல் விளக்கத் திடல் ஆய்வு செய்தார்.
- நீடித்த நிலையான விவசாய நிலங்களில் பசுமை போர்வை இயக்கம் திட்டத்தில் வழங்கப்பட்டு விவசாயிகள் வயல்களில் நடப்பட்ட மரக்கன்றுகள் பராமரிக்க வேண்டிய வழி முறைகள் பற்றி விவசாயிகளிடம் கூறினார்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டாரத்தில் வேளாண்மை இணை இயக்குனர் கணேசன் முதலமைச்சரின் மாணவரி நில மேம்பாட்டு இயக்கம் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட சிவப்பு கடல்பாசி, ஹியூமினால் கோல்ட் பயன்படுத்தப்பட்ட வயல், தேசிய உணவு பாதுகாப்பு எண்ணெய்வித்து இயக்கம் திட்டத்தின் கீழ் தங்க பயிரான சோயா பீன்ஸ் செயல் விளக்கத் திடல் ஆய்வு செய்தார்.
நீடித்த நிலையான விவசாய நிலங்களில் பசுமை போர்வை இயக்கம் திட்டத்தில் வழங்கப்பட்டு விவசாயிகள் வயல்களில் நடப்பட்ட மரக்கன்றுகளான மலைவேம்பு,தேக்கு, நாவல் ஆகியவற்றை ஆய்வு செய்து பராமரிக்க வேண்டிய வழி முறைகள் பற்றி விவசாயிகளிடம் கூறினார்.
மேலும் விவசாயிகளி–டையே தங்கப்பயிர் சோயா பீன்ஸ் பயிர் சாகுபடி செய்வதின் தொழில்–நுட்பங்களை விவசாயிக–ளுக்கு எடுத்துக் கூறினார்.
இந்த ஆய்வில் ஆத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் குமாரசாமி மற்றும் வேளாண்மை அலுவலர் ஜானகி, உதவி வேளாண்மை அலுவலர் பெரியசாமி உடன் இருந்தனர்.