உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற மாணவிக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஊக்கத்தொகையாக ரூ.20 ஆயிரம் வழங்கினார்

மாநில அளவிலான தடகளப்போட்டியில் வெறும் காலில் ஓடி 3-ம் இடம் பிடித்த அரசுபள்ளி மாணவிக்கு நிதிஉதவி -மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வழங்கினார்

Published On 2022-12-01 09:07 GMT   |   Update On 2022-12-01 09:07 GMT
  • விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான கலை திருவிழா போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது.
  • மாநில அளவிலான தடகள போட்டியில் 3000-மீ ஓட்டப்பந்தயத்தில் வெறும் காலில் ஓடி 3-ம் இடம் பிடித்து வெற்றி பெற்ற மாணவி ராதிகாவுக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஊக்கத்தொகையாக ரூ.20 ஆயிரம் வழங்கினார்.

விளாத்திகுளம்:

விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான கலை திருவிழா போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது, திருவண்ணாமலையில் நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டியில் 3000-மீ ஓட்டப்பந்தயத்தில் வெறும் காலில் ஓடி 3-ம் இடம் பிடித்து வெற்றி பெற்ற லட்சுமிநாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த விளாத்திகுளம் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவி ராதிகாவுக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஊக்கத்தொகையாக ரூ.20 ஆயிரம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியை ரோஸ்லின் சாந்தி, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, நகர செயலாளர் வேலுச்சாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், வார்டு கவுன்சிலர்கள் வேல்ஈஸ்வரி, அன்பில்நாராயண மூர்த்தி, குறிஞ்சி ராம்குமார், பிரியா முனியசாமி, சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்பட ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News