உள்ளூர் செய்திகள்

பலியான நயினார்புரம் சுடலைகனி குடும்பத்தினருக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. ஆறுதல் கூறி நிதிஉதவி வழங்கிய காட்சி.

சிவகளை குளத்தில் மூழ்கி பலியான இளம்பெண் குடும்பத்திற்கு நிதி உதவி - ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார்

Published On 2022-12-02 09:03 GMT   |   Update On 2022-12-02 09:03 GMT
  • இளம்பெண்ணும் அவரது உறவினர்களும் சிவகளை குளத்தில் குளிக்க சென்றனர்
  • அங்கு குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி இறந்தனர்

தூத்துக்குடி:

சிவகளை அருகே உள்ள நயினார்புரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளி சுடலைவடிவு என்ற தேவராஜ் (வயது 56). இவரது மனைவி சண்முகத்தாய் (52) கடந்த அக்டோபர் 30-ந் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

இவரது மறைவை தொடர்ந்து கடந்த 5-ந்தேதி தேவராஜ் வீட்டில் சண்முகத்தாயின் இறப்பு விஷேச நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் அவரது உறவினர்கள் பலர் வந்து கலந்து கொண்டனர். விஷேச நிகழ்ச்சி முடிந்த மறுநாள் தேவராஜ் மகள் சுடலைகனி மற்றும் கோகிலா என்ற சிறுமியும், உறவினர்களும் சிவகளை குளத்தில் குளிக்க சென்றனர். அங்கு குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சுடலைகனி மற்றும் கோகிலா ஆகியோர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.

நேற்று மதியம் சிவகளை வந்த ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. நயினார்புரத்தில் உள்ள தேவராஜ் வீட்டிற்கு சென்று அங்கு சுடலைகனி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் சுடலைகனி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, சிவகளை பஞ்சாயத்து தலைவர் பிரதிபா மதிவாணன், கவுன்சிலர் பிச்சையா, விவசாய சங்கம் தலைவர் மதிவாணன், தி.மு.க. பெருங்குளம் நகர செயலாளர் நவநீதமுத்துக்குமார், தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், பொருளாளர் எடிசன், முன்னாள் தலைவர் ஜெயசீலன்துரை, ஸ்ரீவை. வட்டார தலைவர்கள் மேற்கு நல்லகண்ணு, வடக்கு சொரிமுத்து பிரதாபன், மாநில ஊடக பிரிவு தலைவர் முத்துமணி, ஸ்ரீவைகுண்டம் ஊடக பிரிவு மரியராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News