உள்ளூர் செய்திகள்

கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் சிலம்பம் போட்டி நடத்துவதில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்திய காட்சி.

கடலூரில்முதல் அமைச்சர் கோப்பை போட்டி::சிலம்ப வீரர்கள் தர்ணா போராட்டம்

Published On 2023-03-01 10:04 GMT   |   Update On 2023-03-01 10:04 GMT
  • கடந்த 13-ந்தேதி நடக்க இருந்த சிலம்பம் போட்டிகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டது.
  • போட்டி நடத்துவதற்கான விதிமுறைகள் மாறுபட்டு இருப்பதாக கூறி ஒரு பிரிவினர் போட்டியை நடத்தக்கூடாது என கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்:

மாநில அளவிலான தமிழ்நாடு முதல் அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கடந்த 12-ந் தேதி தொடங்கி 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் கைப்பந்து, கிரிக்கெட், சிலம்பம் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த 13-ந்தேதி நடக்க இருந்த சிலம்பம் போட்டிகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த போட்டிகள் மீண்டும் இன்று நடத்தப்படும் என கலெக்டர் பாலசுப்பிரமணியம் அறிவித்திருந்தார். அதன்படி இன்று சிலம்பம் போட்டி தொடங்க இருந்த நிலையில் போட்டி நடத்துவதற்கான விதிமுறைகள் மாறுபட்டு இருப்பதாக கூறி ஒரு பிரிவினர் போட்டியை நடத்தக்கூடாது என கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸ் துறையினர், மாவட்ட விளையாட்டு துறை அதிகாரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் படுத்தினர். பின்னர் போட்டி தொடர்ந்து நடைபெற்றது.

Tags:    

Similar News