உள்ளூர் செய்திகள்

அவலாஞ்சியில் ரூ.2.50 கோடியில் நவீனமயமாகும் மீன் பண்ணை- கலெக்டர் அருணா நேரில் ஆய்வு

Published On 2023-11-10 08:13 GMT   |   Update On 2023-11-10 08:13 GMT
  • பண்ணையில் தடுப்புச்சுவர் மற்றும் மின் பணிகள் போன்ற பணிகள் நடை பெற்று வருகிறது.
  • கலெக்டர் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் குந்தா வட்டம் அவலாஞ்சி டிரவுட் மீன் பண்ணையில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் அருணா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அவலாஞ்சி பகுதியில் செயல்பட்டு வரும் டிரவுட் மீன் பண்ணையில் மீன் வளம் மற்றும் நீர் வாழ் உயிரின வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்டு வரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பண்ணையில் 30 மீட்டர் அளவில் இணைப்பு பாலம், சாலை, தடுப்பணை, 9 சினை மீன் தொட்டிகள், டிரவுட் மீன் குஞ்சு பொரிப்பகம், தடுப்புச்சுவர் மற்றும் மின் பணிகள் போன்ற பணிகள் நடை பெற்று வருகிறது.

இதனை மாவட்ட கலெக்டர் அருணா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சியில் மீன் வளத்துறை உதவி இயக்குனர் ஜோதி லட்சுமணன், ஊட்டி மீன் துறை ஆய்வாளர் ஷில்பா, மீன் துறை சார் ஆய்வாளர் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News