தூத்துக்குடியில் படகில் சென்று மீன்பிடித்த போது மின்சாரம் பாய்ந்து மீனவர் பலி
- டிபோர்சன் நேற்று 2 சிறுவர்களுடன் வழக்கம் போல கோரம்பள்ளம் ஓடையில் நண்டு மற்றும் மீன்பிடிக்க சென்றார்.
- 15 அடி உயர சவுக்கு கம்பை கொண்டு தண்ணீரில் மேலும் கீழும் அழுத்தி தனது கட்டு மரத்தை நகர்த்தி செல்லும் போது அந்த வழியாக சென்ற மின்சார கம்பியில் கம்பு பட்டு மின்சாரம் பாய்ந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி புதிய துறைமுகம்லேபர் காலனியை சேர்ந்தவர் டிபோர்சன் (31). இவர் லேபர் காலனிக்கு வடபுறம் உள்ள கோரம்பள்ளம் உப்பாற்று ஓடையில் நண்டு மற்றும் மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார்.
நேற்று 2 சிறுவர்களுடன் வழக்கம் போல கோரம்பள்ளம் ஓடையில் நண்டு மற்றும் மீன்பிடிக்க சென்றார். புதிய துறைமுகம் அதிவேக சாலையில் உள்ள பாலம் அருகே செல்லும்போது, டிபோர்சன் 15 அடி உயர சவுக்கு கம்பை கொண்டு தண்ணீரில் மேலும் கீழும் அழுத்தி தனது கட்டு மரத்தை நகர்த்தி செல்லும் போது அந்த வழியாக சென்ற மின்சார கம்பியில் கம்பு பட்டு மின்சாரம் பாய்ந்தது. இதில் பைபர் படகில் அவர் மயங்கி விழுந்தார்.
அப்போது படகில் இருந்த சிறுவர்கள் கூச்சல் போடவும் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து டிபோர்சனை மீட்டு புதிய துறைமுக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் , அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தெர்மல் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் லதா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.