உள்ளூர் செய்திகள்
கடலுக்கு நாளை முதல் மீன்பிடிக்க செல்வோம்- மீனவர்கள் அறிவிப்பு
- தமிழகத்தில் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளது.
- விசைப்படகு உரிமையாளர்களின் வாழ்வாதாரம் கருதி நாளை முதல் விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல உள்ளோம்.
சென்னை:
தமிழகத்தில் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளது. எனவே விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. நாட்டுப்படகில் மட்டுமே மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நாளை முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதாக சென்னை மீன்பிடி துறைமுக விசைப்படகு சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் கூறியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:-
விசைப்படகு உரிமையாளர்களின் வாழ்வாதாரம் கருதி நாளை முதல் விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல உள்ளோம். அரசால் தடை செய்யப்பட்ட கசார் இன மீன்களை பிடிக்க அனுமதி கிடையாது. இதை மீறும் விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.