உள்ளூர் செய்திகள்
சாத்தான்குளம் அருகே மீன்பிடி திருவிழா
- 15 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் மீன்பிடித் திருவிழா
- ஊரடங்கு காலகட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் ஊரணி குளத்தில் ஆண்டுதோறும் மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் மீன்பிடித் திருவிழாவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராம மக்கள் திரண்டு வந்து பல்வேறு வகையான மீன்களை பிடித்து மகிழ்வர்.
கொரோனா நோய்த்தொற்று ஊரடங்கு காலகட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த மீன்பிடி திருவிழா தற்போது மீண்டும் நடைபெற்றது.
இதில் பொதுமக்கள் திரண்டு வந்து ஊரணி குளத்தில் பல்வேறு வகையான மீன்களை பிடித்து மகிழ்ந்தனர். எனினும் குறைவான எண்ணிக்கையில் மீன்கள் பிடிபட்டதால் ஊரணியை ஆழப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.