உள்ளூர் செய்திகள்

வாழ்க்கை கிராமத்தில் வீடுகளை சூழ்ந்த வெள்ளநீர்

கொள்ளிடம் ஆற்றுக் கரையோர வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது

Published On 2022-08-13 09:53 GMT   |   Update On 2022-08-13 09:53 GMT
  • கடந்த சில நாட்களாக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வரும் நிலையில், கரையோரம் சாகுபடி செய்த பயிர்கள் சேமதடைந்தன.
  • கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் செல்லும் நிலையில், அப்பகுதியிலுள்ள வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டதால், கொள்ளிடம் ஆற்றிலிருந்து தண்ணீர் வீடுகளை சூழ்ந்துள்ளது.

கபிஸ்தலம்:

கபிஸ்தலம் அருகே சத்தியமங்கலம் ஊராட்சி வாழ்க்கை கிராம மக்கள் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு ஒரு கோரிக்கை அனுப்பி உள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது..

கொள்ளிடம் கரையோரமுள்ள வாழ்க்கை கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பெரும்பாலானோர் விவசாய தொழிலாளர்களாவும், கீரை, வாழை உள்ளிட்ட தானியப்பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வரும் நிலையில், கரையோரம் சாகுபடி செய்த பயிர்கள் சேமதடைந்தன.

இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் செல்லும் நிலையில், அப்பகுதியிலுள்ள வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டதால், கொள்ளிடம் ஆற்றிலிருந்து தண்ணீர் கசிந்து வீடுகளை சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியினர் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக வாழ்க்கை கிராமத்திலுள்ள வடிகால் வாய்க்கால்களை தூர் வாரி, கசிவு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர்.

Tags:    

Similar News