ஆயுதபூஜையை முன்னிட்டு நிலக்கோட்டை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு
- பூக்க ளின் விலை பல மடங்கு அதிகரித்து விற்பனையானது.
- இருந்தபோதும் பொதுமக்கள் ஆர்வமாக பொரி உள்ளிட்ட பூஜை பொருட்களை வாங்கச்சென்றனர்
நிலக்கோட்ைட:
ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டி கையை முன்னிட்டு நில க்கோட்ைட பூ மார்க்கெட்டில் இன்று அனைத்து பூக்களும் விலை கடுமையாக உயர்ந்தது. குறிப்பாக பூஜைக்கு பயன்படுத்தப்படும் அரளி, செண்டுமல்லி, செவ்வந்தி, வாடாமல்லி, கோழி க்கொண்டை ஆகிய பூக்க ளின் விலை பல மடங்கு அதிகரித்து விற்பனையானது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு பை ரூ.50க்கு விற்பனையான அரளிப்பூ இன்று ரூ.400 முதல் ரூ.450 வரை விற்கப்பட்டது. செண்டுமல்லி ரூ.100, கோழிக்கொண்டை ரூ.130, செவ்வந்தி ரூ.350, வாடாமல்லி ரூ.100, துளசி ரூ.350, பன்னீர்ரோஸ் ரூ.300, பட்டன்ரோஸ் ரூ.300, சம்பங்கி ரூ.320 என விற்பனையானது.
கடந்த வருடம் அரளி, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்களுக்கு சரியான விலை கிடைக்காத நிலையில் தற்போது அதற்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இேதபோல மல்லிகை ரூ.850, முல்லை ரூ.550, கலர் பிச்சி ரூ.400, வெள்ைள பிச்சி ரூ.600, கனகாம்பரம் ரூ.500 என விற்பனையானது.
ஆயுத பூஜை என்பதால் நறுமணபூக்கள் சற்று விலை குறைவாகவும், பூஜைக்கான பூக்கள் சற்று விலை அதிகமாகவும் விற்பனை யானது.