உள்ளூர் செய்திகள்
நாகை உச்சமாகாளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா
- அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை நாணயக்கார தெருவில் உள்ள உச்சமாகா ளியம்மன் கோவிலில் வைகாசி உற்சவம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து காளியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் இருந்து ஏராளமான பெண்கள் பூந்தட்டுகள் எடுத்து ஊர்வலமாக காளியம்மன் கோவிலை வந்தடைந்தனர்.
பின்னர், அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விழாவில் கலந்துகொண்ட பெண்களுக்கு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பூக்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
அதனைய டுத்து கலசம்பாடி முத்து பூசாரி குழுவினரின் காளியாட்டத்துடன் சுவாமி வீதிஉலா நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.