கூட்டுறவு அங்காடிகளில் பறக்கும் படை அதிகாரி திடீர் ஆய்வு - விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிப்பு
- 400 கிலோ அரிசி, 11 கிலோ துவரம் பருப்பு, 5 லிட்டர் பாமாயில் ஆகிய ரேஷன் பொருள்கள் எடுத்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.
- ஈடுபட்ட விற்பனையாளர் பாஸ்கரனுக்கு ரூ.7,600 அபராதம் விதிக்கப்பட்டது.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் படி பாபநாசம் தாலுகாவில் கூட்டுறவு அங்காடிகளில் பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், பறக்கும் படை அதிகாரி தமிழ்வாணன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஏர்வாடி கூட்டுறவு அங்காடியில் அங்கீகார சான்று இல்லாமல் 42 குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து 400 கிலோ அரிசி, 11 கிலோ துவரம் பருப்பு, 5 லிட்டர் பாமாயில் ஆகிய ரேஷன் பொருள்கள் எடுத்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. இதில் ஈடுபட்ட விற்பனையாளர் பாலகிருஷ்ணனுக்கு ரூ.11, 250 அபதாரம் விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒன்பத்துவேலி அங்காடியில் 53 குடும்ப அட்டைதாரர்களிடமிருந்து 200 கிலோ அரிசி, 13 கிலோ சர்க்கரை அங்கீகார சான்று இல்லாமல் எடுத்திருப்பது கண்டறியப்பட்டது.
இதில் ஈடுபட்ட விற்பனையாளர் பாஸ்க ரனுக்கு ரூ.7,600 அபதாரம் விதிக்கப்பட்டது. இரண்டு விற்பனையாளர்கள் மீதும் துறையின் மூலம் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆய்வின்போது வருவாய் ஆய்வாளர் கபிலன் உடன் இருந்தார். மேலும் பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலர் சிவகுமார், வழுத்தூர் கூட்டுறவு அங்காடியில் சோதனை ஈடுபட்டபோது அரிசி 100 கிலோ கூடுதலாக இருப்பது கண்டறியப்பட்டது. இதில் ஈடுபட்ட விற்பனையாளர் குமாருக்கு ரூ.2,500 அபதாரம் விதிக்கப்பட்டது.