உள்ளூர் செய்திகள்

கடலூரில் பெண் போலீஸ் வீட்டில் திருட்டை தொடர்ந்துமஞ்சக்குப்பத்தில் கடையின் பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம் கொள்ளை:பொதுமக்கள் பீதி

Published On 2023-02-25 10:02 GMT   |   Update On 2023-02-25 10:02 GMT
  • வெங்கட்( வயது 58).நேற்று இரவு வழக்கம் போல்கடையைப் பூட்டிவிட்டு இன்று காலை திறப்பதற்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது
  • பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தது,.

கடலூர்:

கடலூர் மஞ்சக்குப்பம் சுதர்சனம் தெருவை சேர்ந்தவர் வெங்கட்( வயது 58)இவருக்கு அதே தெருவில் மளிகை கடை உள்ளது. நேற்று இரவு வழக்கம் போல் பூட்டிவிட்டு இன்று காலை திறப்பதற்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது. கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தது.மேலும் கடையில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இத்தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர் . இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு பார்வதி இவரது கணவர் சரவணன் ஆகியோர் நேற்று காலையில் வீட்டில் இருந்து வேலைக்கு சென்று விட்டு மதியம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டை உடைத்து 7 லட்சம் மதிப்பிலான 18 பவுன் நகைகள் திருடி சென்றது தெரியவந்தது.

மக்களுக்கு பிரச்சினை என்றால் போலீசாரிடம் சென்று புகார் அளித்து நடவடிக்கை மேற்கொள்வோம் ஆனால் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கோவில்கள், கடைகள் மற்றும் வீட்டில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ள நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு இருந்த நிலையில், போலீசார் வீட்டிலே பூட்டை உடைத்து நகை திருடிய சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியதோடு அவர்களுக்கு சவால் விடும் அளவில் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்இந்தத் தொடர் திருட்டு சம்பவம் ,போலீசார் வீட்டிலே திருடிய சம்பவம் மீண்டும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இது மட்டும் இன்றி சில நாட்களுக்கு முன்பு மாவட்ட போலீஸ் அலுவலகம் அருகே 24 மணி நேரமும் உயர் அதிகாரிகள் முதல் போலீசார் வரை சென்று வரும் சாலையில் உள்ள கோவிலில் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த ரூ. 10 ஆயிரம் திருடிய சம்பவம் குறிப்பிடத்தக்கதாகும். ஆகையால் போலீசார் ஏற்கனவே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தனிப்படையை அமைத்து தீவிரமாக கவனம் செலுத்தி கைது செய்வதோடு வருங்காலங்களில் தொடர் திருட்டு சம்பவத்தை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News