ராயல் ஏஞ்சல் டுட்டோரியல் கல்லூரியில் உணவு திருவிழா
- தாளாளர் கீதா தங்கராஜன் உணவு திருவிழாவை தொடங்கி வைத்தார்.
- மாணவ-மாணவிகள் 6 அணிகளாக பிரிந்து பாரம்பரிய உணவு வகைகளை தயார் செய்து அசத்தினார்கள்.
திருப்பூர் :
திருப்பூர் பெருமாள் கோவில் வீதியில் உள்ள ராயல் ஏஞ்சல் டுட்டோரியல் கல்லூரியில் உணவு திருவிழா நடைபெற்றது. தாளாளர் கீதா தங்கராஜன் உணவு திருவிழாவை தொடங்கி வைத்தார். மாணவ-மாணவிகள் 6 அணிகளாக பிரிந்து பாரம்பரிய உணவு வகைகளை தயார் செய்து அசத்தினார்கள்.
இயற்கை முறையில் விளைந்த பொருட்களை கொண்டு கம்பு தோசை, கம்மங்கூழ், ராகி வடை, சோள பக்கோடா, இளநீர் பாயாசம், புட்டு, கோதுமை அல்வா, சாமை அரிசி உணவு வகைகள், உளுந்து வடை, தேங்காய் பர்பி, ரசகுல்லா, முளை கட்டிய பச்சை பயிறு, புதினா சட்னி, எள்ளுருண்டை, அவல், கோதுமை அடை, கோளா உருண்டை, முட்டை மசாலா, ராகி அடை, மாங்காய் தொக்கு மற்றும் ரசம், சாம்பார் உள்ளிட்ட குழம்பு வகைகள், கேக் வகைகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட இயற்கை முறையிலான உணவு வகைகளை தயாரித்து தனித்திறமைகளை வெளிப்படுத்தினார்கள். முடிவில் சிறந்த உணவு தயாரிப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் பிரவீன் தலைமையிலான மாணவர் அணி முதலிடமும், ஸ்ரீதர் அணி 2-ம் இடமும், யாழினி தலைமையிலான மாணவிகள் அணி 3-ம் இடமும் பிடித்து வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு நினைவுப்பரிசு மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் சான்றிதழ், மெடல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஜே.சி.ஐ. மெட்ரோ அமைப்பின் தலைவர், செயலாளர் ஆடிட்டர் கார்த்தி, இயக்குனர் பிரசன்னா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர். ரோப்டிக் ஆசிரியர் சகாயசுரேஷ், கே.ஆர்.எஸ். பில்டர்ஸ் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்–லூரி முதல்வர் தங்கராஜன் நன்றி கூறினார்.