கடலூரில் சத்துணவு ஊழியர்கள் -உணவு மானியத்தை உயர்த்தி வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
- சத்துணவு மையங்களில் சத்துணவு வழங்க ஏதுவாக விலைவாசிக்கு ஏற்ப உணவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
- சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்ற வேண்டும்
கடலூர்:
சத்துணவு மையங்களில் சத்துணவு வழங்க ஏதுவாக விலைவாசிக்கு ஏற்ப உணவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்ற வேண்டும். சத்துணவு திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை கைவிட வேண்டும். சத்துணவு பிரிவில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு நாகம்மாள் தலைமை தாங்கினார். மல்லிகா, புஷ்பலதா, திவ்யா, லட்சுமி, சரளா, செல்வநாயகி, சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுரி வரவேற்றார். மாவட்ட செயலாளர் ரங்கசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார். இதில் சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் ரேவதி நன்றி கூறினார்.