உள்ளூர் செய்திகள்

1021 அரசு டாக்டர் பணியிடங்களுக்கானதேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு

Published On 2023-05-18 09:41 GMT   |   Update On 2023-05-18 09:41 GMT
  • அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறி விப்பை 11.10.2022 அன்று எம்.ஆர்.பி. வெளியிட்டது.
  • இதையடுத்து 25 ஆயிரம் டாக்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

சேலம்:

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறி விப்பை 11.10.2022 அன்று எம்.ஆர்.பி. வெளியிட்டது. இதையடுத்து 25 ஆயிரம் டாக்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

தமிழகம் முழுவதும் 91 மையங்களில் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி நடைபெற்றது. ஒரு மணி நேரம் தமிழ் மொழி தகுதித் தேர்வும், 2 மணி நேரம் கணினி வழியில் கொள்குறி வகையில் சரியான விடையை தேர்ந்தெடுக்கும் தேர்வும் நடைபெற்றது. விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் தேர்வு முடிவுகளை வெளியிட எம்.ஆர்.பி. திட்டமிட்டுள்ளது.

இதனிடையே தமிழ் மொழித் தேர்வு கடினமாக இருந்ததாகவும், எனவே தமிழ் மொழி தகுதித் தேர்வு மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் தேர்வு வாரி யத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ் மொழி தகுதி தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் 20-ல் இருந்து 15- ஆக குறைக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

Tags:    

Similar News