கொலை வழக்கு விசாரணைக்காக திகார் ஜெயிலில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாகர். கோர்ட்டுக்கு வந்த கைதி
- இந்த நிலையில் கொலை வழக்கு இன்று கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
- இதற்காக திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த ரபீக்கை டெல்லி போலீசார் பலத்த பாதுகாப்புடன் நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தனர்.
- அவன் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டான்.
நாகர்கோவில், அக். 27-
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் செய்யது அலி (வயது 30), வாசிம் என்ற முன்னா என்ற ரபீக் (34).
கொலை
நண்பர்களான இவர்கள் நாகர்கோவில் மீனாட்சி புரத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கி இருந்து தொழில் செய்து வந்தனர். இந்த நிலையில் செய்யது அலிக்கும், ரபீக்கி ற்கும் தொழிலில் பணம் கொடுக்கல்- வாங்கல் தொடர்பாக அடிக்கடி பிரச்சினை எழுந்து உள்ளது.
சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ரபீக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செய்யதுஅலியை குத்தி கொலை செய்தார். இதைதொடர்ந்து, ரபீக் அங்கிருந்து தப்பிஓடி தலைமறைவாகி விட்டார்.
கைது
இந்த கொலை சம்ப வம் கடந்த 2010-ம் ஆண்டு நடந்தது. இது குறித்து கோட்டார் போலீ சார் வழக்குப்பதிவு செய்து தலை மறைவான ரபீக்கை தேடி வந்தனர். ஆனால் அவர் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
இதற்கிடையே டெல்லி யில் ஒரு கொலை வழக்கில் ரபீக் கைது செய்யப்பட்டார். இது பற்றிய தகவல் குமரி மாவட்ட போலீசுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் கோட்டார் கொலை வழக்கு தொடர் பாக விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
இதை தொடர்ந்து டெல்லி போலீசார் ரபீக்கை கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர் படுத்தி இருந்தனர். விசாரணைக்குப் பின்னர் ரபீக் திகார் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பலத்த பாதுகாப்புடன்...
இந்த நிலையில் கொலை வழக்கு இன்று கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதற்காக திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த ரபீக்கை டெல்லி போலீசார் பலத்த பாதுகாப்புடன் நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தனர். அவன் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டான்.