முதன் முறையாக புதிய விதிமுறைகளின் கீழ் 50 மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி
- உலக கராத்தே சங்கத்தின் புதிய விதிமுறைகளின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டது.
- இதில் சிறப்பு பயிற்சியாளராக உலக கராத்தே நடுவர் சிகான் சம்பத்குமார் பயிற்சி அளித்தார்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக உலக கராத்தே சங்கத்தின் புதிய விதிமுறைகளின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் எட்டர்னல் ஸ்போர்ட்ஸ் அகாடமியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர்கள் பயிற்சி பெற்றனர். இதில் சிறப்பு பயிற்சியாளராக உலக கராத்தே நடுவர் சிகான் சம்பத்குமார் பயிற்சி அளித்தார். உதவியாக ஈரோடு மாவட்ட தேசிய நடுவர்கள் சென்சாய் ஆனந்த் மற்றும் சரவணன் பயிற்சி அளித்தனர். இந்நிகழ்வில் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைமை பயிற்சியாளர் சிந்தியா பாபு தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கலந்துகொண்டு தேசிய அளவில் நமது ஊரில் உள்ள மாணவர்கள் மேலும் வெற்றி பெற வாழ்த்தினார். சிறப்பு அழைப்பாளர்களாக குமரமங்கலம் நாட்டாமைக்காரர் வடிவேல், திருச்செங்கோடு அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் அணிமூர் மோகன் திருச்செங்கோடு சட்டையம்புதூர் நகர மன்ற உறுப்பினர் வெங்கடேஷ் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பயிற்சியாளர்கள் பாஸ்கர், குழந்தைவேல், தனபால், பவித்ரா, வினோத், தீபக் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.